News April 4, 2025
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ல் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி முடிவடைந்தது. மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News April 10, 2025
ராமதாஸ் வீட்டின் முன்பு போராட்டம்

அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தானே தலைவர் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், தைலாபுரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். ராமதாஸ் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், ‘பாமகவின் நிரந்தர தலைவர் அன்புமணியை மட்டும்தான்’ என்று முழக்கம் எழுப்பி வருகின்றனர். மேலும், ராமதாசை சிலர் இயக்குவதாகவும், அவர் தவறான முடிவை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
News April 10, 2025
திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
News April 10, 2025
2 கண்டங்கள், 14 நாடுகள், 30000 கிமீ: உலகின் நீளமான ரோடு!

பான் அமெரிக்க ரோடு, வட அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து, தென் அமெரிக்காவின் அர்ஜென்டினா வரை நீளுகிறது. மொத்தமாக 14 நாடுகள், 30 ஆயிரம் கிமீ கடக்கும் ரோட்டில் ஒரு கட்டோ, ஒரு யூ-டர்னோக்கூட வராது. நேராக, போய்க்கிட்டே இருக்கணும். இந்த ரோட்டை கடக்க 60 நாள்கள் ஆகுமாம். அதுவும் ஒரு நாளைக்கு 500 கி.மீட்டரை கடந்தால் தான்! அதனாலேயே, பலருக்கும் போர் அடித்து விடும். நீங்க இதில் ட்ராவல் பண்ண தயாரா!