News August 19, 2025
கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு நாளை (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
போராட்டத்தை முடித்து வைங்க: நயினார்

<<18902841>>சத்துணவு ஊழியர்களுடன்<<>> பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போராட்டம் அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என்றும், போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்ஃஃ.
News January 20, 2026
இன்று ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று முதல் (ஜன.,20) தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர், கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
BREAKING: தமிழகம் முழுவதும் இன்று ஸ்டிரைக்

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.


