News March 10, 2025
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வரும் 12ஆம் தேதி (புதன்கிழமை) கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவது உண்டு. இதனையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய வரும் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2025
ஹிந்துக்களுக்கு தனி மட்டன் கடைகள்

மஹாராஷ்டிராவில் ஹிந்துக்களுக்கென ஹிந்துக்களால் நடத்தப்படும் பிரத்யேக ஜத்கா இறைச்சி கடைகள் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதேஷ் ராணே அறிவித்துள்ளார். இதற்கென ‘Malhar’ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹலால் முறைக்கு மாற்றாக இந்த ஜத்கா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஹிந்து மரபு படி, விலங்குகள் வலியில் துடிக்காமல் ஒரே அடியில் பலியிடப்பட்டு ஜத்கா இறைச்சி தயாரிக்கப்படுகிறது.
News March 10, 2025
ஆயுத இறக்குமதி.. உலகிலேயே இந்தியா 2ஆவது இடம்

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா (8.3%) 2ஆவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. முதலிடத்தில் உக்ரைன் (8.8%), 3-5 இடங்களில் கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இருப்பதாக SIPRI கூறியுள்ளது. ஆயுதங்களுக்கு ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த நிலை மாறி, USA, பிரான்ஸ், இஸ்ரேலிடம் தற்போது இந்தியா அதிக ஆயுதம் வாங்கி உள்ளதாகவும் SIPRI குறிப்பிட்டுள்ளது.
News March 10, 2025
தளபதி இல்லை, இனி அண்ணா… விஜய் புது பிளான்

ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா என அழைப்பார்கள். CM ஸ்டாலினை திமுகவினர் அப்பா என பிரசாரம் செய்து வருகின்றனர். இதே பாணியில் விஜய், தன்னை மக்களிடையே அண்ணா என அடையாளப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி என்பதற்கு பதில் அண்ணா என விஜய்யை அழைக்க வேண்டும் என தவெகவினர் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அண்ணா என பாடல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.