News April 10, 2025
நெல்லை, தென்காசிக்கு நாளை உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.
Similar News
News November 28, 2025
காட்டுப்பூனைகளுக்கு எதிராக போரா?

‘காட்டுப்பூனைகளுக்கு எதிராக போர்’. கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? நியூசிலாந்தில் உள்ள அரியவகை உயிரினங்களை காட்டுப்பூனைகள் வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. எனவே, பூர்வீக உயிரினங்களை காக்க, 25 லட்சம் காட்டுப் பூனைகளை 2050-க்குள் ஒழிக்க போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவற்றை ‘கொடூர கொலையாளிகள்’ என அறிவித்துள்ள அரசு, நியூசிலாந்து ஒரு பெரிய சூழலியல் போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
News November 28, 2025
உதயநிதி சொல்வதை மட்டும் கேளுங்க: K.N.நேரு

கருணாநிதிக்கு இருக்கும் ஞானம், திறமை, போர்க்குணம் என அனைத்தும் உதயநிதிக்கு இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இளைஞரணி செயலாளர் முதல் துணை முதல்வர் வரை ஒவ்வொரு பொறுப்பையும் உதயநிதி சரியாக நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உதயநிதி என்ன சொல்கிறாரோ அதை தட்டாமல் செய்தாலே போதும், வரும் தேர்தலில் திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என நிர்வாகிகளுக்கு கூறியுள்ளார்.
News November 28, 2025
BREAKING: வேகமாக நெருங்கும் புயல்.. கனமழை வெளுக்கும்

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே <<18409565>>NDRF குழுக்கள்<<>> டெல்டாவுக்கு விரைந்துள்ளன. மேலும், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் மணிக்கு 7 KM வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது.


