News April 3, 2025

5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…!

image

மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப். 4) விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காசி விசுவநாத சுவாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப். 7, 11-ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏப். 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Similar News

News December 10, 2025

தருமபுரி: தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செய்த பணிகள் மற்றும் அதன் மூலம் எய்திய சாதனைகள் கொண்ட நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். என ஆட்சியர் சதிஷ் (டிச.09) அறிவித்தார்.

News December 10, 2025

டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

image

தனக்கு டைரக்‌ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.

News December 10, 2025

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல்

image

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, EPS தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம்.

error: Content is protected !!