News August 5, 2025
சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 6, 2025
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல்

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்ட பின் வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா். ரம்ஜானுக்கு முன்னர் தேர்தலை முடிக்கும் நோக்கில் வங்கதேச அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
News August 6, 2025
அதிமுக முன்னாள் MLA துரை.அன்பரசன் காலமானார்

அதிமுக EX MLA துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். எம்ஜிஆர், ஜெ., உள்ளிட்டோரின் அன்பை பெற்ற அவர், 1984 – 1987 வரை நெல்லிக்குப்பம் எம்எல்ஏவாக இருந்தார். தென்னாற்காடு மாவட்ட அதிமுக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது உடலுக்கு அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
News August 6, 2025
மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் முடக்கம்: சசி

தொழில் நிறுவனங்களுக்கு ஜெ., ஆட்சிக்காலத்தில் ₹30 என்று இருந்த நிலைக்கட்டணம் திமுக ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். 50 கிலோவாட் வரை ₹162/KW, 112 கிலோவாட் வரை ₹330/KW, 112 கிலோவாட்-க்கு மேல் ₹608/KW என உயர்த்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் உயர்வால், தற்போது சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.