News June 7, 2024

உள்ளாட்சித் தேர்தல்: விசிக புதுத் திட்டம்

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிய விசிக, உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதுத் திட்டம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக என எந்த கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டாலும், அதிக இடங்களை கேட்க வேண்டும் என்றும், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக இடங்களை கேட்க அக்கட்சி திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Similar News

News August 8, 2025

‘காந்தாரா’ பட நடிகர்கள் மரணம்.. தொடரும் சோகம்

image

காந்தாரா படத்தில் நடித்த <<17344047>>பிரபாகர் கல்யாணி<<>>, இன்று காலமானார். ஏற்கெனவே காந்தாரா சேப்டர் 1 படத்தில் நடித்த 3 நடிகர்கள் மரணம் அடைந்துள்ளனர். மே 6-ல் <<16341703>>கபில் <<>> செளபர்ணிகா நதியில் மூழ்கி பலியானார். மே 11-ல் நடனமாடி கொண்டிருந்த <<16390958>>ராகேஷ் பூஜாரி<<>> மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோல், <<16678105>>விஜூ <<>>மாரடைப்பால் காலமானார். இதனால், படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

News August 8, 2025

கவின் வழக்கு: ஆக.17ம் தேதி புதிய தமிழகம் போராட்டம்

image

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 17-ம் தேதி புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஆறுமுகமங்கலம் சென்று கவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த கிருஷ்ணசாமி, அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் பங்கேற்றார். கவின் கொலைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

News August 8, 2025

பண்ட்டிடம் மன்னிப்பு கேட்ட வோக்ஸ்

image

IND vs ENG தொடரில் காயம் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி விளையாடிய பண்ட், வோக்ஸ் முயற்சியை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டினர். இந்நிலையில் பண்ட் சமூக வலைதளத்தில், காயத்துடன் வோக்ஸ் களமிறங்கிய போட்டோவை பதிவிட்டு, எல்லாம் சரியாகும், உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன் என்றார். இதற்கு நன்றி தெரிவித்த வோக்ஸ், எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!