News August 12, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News August 12, 2025
உருவாகிறது புயல் சின்னம்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடமேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் ஆக., 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
பாட்டிலுக்கு இனி ₹10 அதிகம்.. மது பிரியர்கள் கவனத்திற்கு..!

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பருக்குள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மது பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படும். காலி பாட்டில்களை திரும்பக் கொடுத்து அந்த ₹10-ஐ மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே இந்த திட்டம் அமலில் உள்ளது. காலி மது பாட்டிலை திரும்பப் பெறுவது பற்றி என்ன நினைக்கிறீங்க?
News August 12, 2025
அன்புமணியை நீக்க குழு அமைப்பு: ராமதாஸ்

பாமகவின் தலைவராக இல்லாத அன்புமணி பொதுக்குழுவை நடத்தியது தவறு என ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க (அ) சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த மே 30-ம் தேதி முதல் கட்சியின் நிறுவனரான தானே தலைவராகவும் செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். பாமகவில் தந்தை -மகன் மோதல் முடிவுக்கு வருவது எப்போது?