News April 22, 2024
லிவ் இன் உறவு முறை மேற்கத்திய கலாசாரம்!

திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதை நம் கலாசாரம் ஒருபோதும் அங்கீகரித்தது இல்லையென நடிகர் முகேஷ் கன்னா தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்பு லிவ் இன் உறவில் இருந்தால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியுமென நடிகை ஜீனத் அமன் கூறியிருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள முகேஷ், ‘அவர் வேண்டுமானால் அவ்வாறு வாழலாம். அதற்காக, அனைவரையும் அவ்வாறு இருக்க சொல்வதை ஏற்க முடியாது’ என்றார்.
Similar News
News January 2, 2026
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
News January 2, 2026
துணை ஜனாதிபதியுடன் EPS

இரண்டு நாள் பயணமாக இன்று காலை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு வந்தார். பின்னர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் சென்னை மக்கள் பவனில் அவரை EPS மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து நாளை காலை சி.பி. ராதாகிருஷ்ணன் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார்.
News January 2, 2026
பிஹார் போல அசாமிலும் பெண்களுக்கு ₹8,000

பிஹாரை போல அசாமிலும் பெண் வாக்காளர்களை குறிவைத்து அம்மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாதம் ₹1,000 என 5 மாதங்களுக்கு ₹5,000 + ‘Bohag Bihu’ திருவிழா பரிசாக ₹3,000 என மொத்தம் ₹8,000, மாநிலத்தில் உள்ள 37 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் இது தவிர PG மாணவர்களுக்கு மாதம் ₹2,000, UG மாணவர்களுக்கு ₹1,000 வழங்கப்பட உள்ளது.


