News August 18, 2024
வாழ்க்கை போன போக்கில் வாழ்கிறேன்: நிகிலா

எதையும் திட்டமிடாமல், வாழ்க்கை போன போக்கில் வாழ்வதாக நடிகை நிகிலா தெரிவித்துள்ளார். திட்டமிட்டு வாழ்ந்தால் புதிது என்ற சுவாரஸ்யம் இருக்காது எனவும், எதிர்பார்க்காதது வாழ்க்கையில் கிடைக்கும்போது, அந்த சந்தோஷம் இரட்டிப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நடிகை என்பது தனது தொழில் என்பதால், அதை தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
வங்கியில் 996 காலியிடங்கள், ₹51,000 சம்பளம்: APPLY

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ₹51,000. வயது வரம்பு: 20 – 35 வரை. தேர்வு: Personal / Telephonic / Video interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.23. விண்ணப்பிக்க இங்கே <
News December 8, 2025
2026-ல் DMK – TVK இடையேதான் போட்டி: பெங்களூரு புகழேந்தி

ஜெ., நினைவிடத்தில் 4 பிரிவுகளாக அதிமுகவினர் மரியாதை செலுத்தியது வேதனை அளிப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் EPS செயல்படுவதாகவும், OPS எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில்தான் சேருவார் என்றும் சாடினார். மேலும், தற்போது அதிமுகவை விட திமுக, தவெகவே முன்னிலையில் இருக்கிறது என்றும் 2026-ல் DMK – TVK இடையேதான் போட்டி எனவும் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்!

வீரம், வேதாளம், விஸ்வாசம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துள்ள அஜித் – சிறுத்தை சிவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. தொடர்ந்து அஜித்தின் ‘Good Book’-ல் இருக்கும் சிறுத்தை சிவா, அவருக்கு ஒரு விளம்பர படத்தை இயக்கவுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘Campa Cola’ விளம்பரத்தில் அஜித் நடிக்க அதைதான் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறாராம். இந்த விளம்பரம் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.


