News October 3, 2025

ஓரவஞ்சனையால் போன உயிர்கள்: EPS

image

கரூர் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 உயிர்கள் போயிருக்காது என EPS குற்றம்சாட்டியுள்ளார். ஓரவஞ்சனை இன்றி எல்லோருக்கும் சமமாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக விமர்சித்த அவர், தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Similar News

News October 3, 2025

BREAKING: அடுத்தடுத்து கட்சி பதவியை பறிக்கும் இபிஎஸ்

image

செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை EPS தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், செங்கோட்டையன் ஆதரவாளர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியதுடன், ஏ.கே.செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சியில் செங்கோட்டையன் ஆதரவு வட்டத்தை குறைக்கும் வகையில், தற்போது இந்த மாற்றங்களை EPS செய்திருக்கிறார்.

News October 3, 2025

SNAPCHAT யூஸ் பண்ண இனி காசு கட்டணும்!

image

இளைஞர்கள் தினமும் பயன்படுத்தும் SNAPCHAT செயலியில் போட்டோ/வீடியோக்களை Store செய்ய மாதம் ₹300 வரை கட்டணம் செலுத்தவேண்டும். உங்கள் கணக்கிலுள்ள Memories 5GB-ஐ கடந்தால் கட்டணம் வசூலிக்கப்படுமாம். விருப்பமில்லாதவர்கள் 12 மாதங்களுக்கும் தங்களுடைய Memories-ல் உள்ளவற்றை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால் அவை நீக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறனர்.

News October 3, 2025

கரூர் மீது பாஜகவுக்கு என்ன அக்கறை: CM ஸ்டாலின்

image

கலவரத்துக்குப் பிறகு மணிப்பூருக்கு செல்லாத பாஜக அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனடியாக வந்தது ஏன் என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். BJP MP-க்கள் தமிழ்நாட்டின் மீது உள்ள அக்கறையில் கரூருக்கு வரவில்லை என்றும் எதையாவது வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் செய்ய முடியுமா என்ற நோக்கத்துடனே வந்ததாகவும் விமர்சித்துள்ளார். மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக BJP இருப்பதாகவும் CM சாடினார்.

error: Content is protected !!