News December 19, 2025
‘Live-In’ உறவு குற்றமல்ல: ஐகோர்ட்

Live-In உறவு சட்டவிரோதமானது அல்ல என்று அலகாபாத் HC குறிப்பிட்டுள்ளது. Live-In உறவில் இருக்கும் 12 பெண்கள், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு உடனடி போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. வயதுவந்த இருவர் இணைந்து வாழ்வதில் குறுக்கிட யாருக்கும் உரிமையில்லை என்ற நீதிபதிகள், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்றும் தெரிவித்தனர்.
Similar News
News December 24, 2025
கேமரா போனை பயன்படுத்த பெண்களுக்கு தடை

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பெண்கள் பயன்படுத்தக்கூடாது என ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கீபேட் மொபைலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பார்வைத்திறன் குறைவதால் இந்த முடிவு என கிராமத்தினர் கூறுகின்றனர். இந்த நடைமுறை ஜன.26 முதல் அமலுக்கு வருகிறது. உங்கள் கருத்து என்ன?
News December 24, 2025
டிகிரியை வைத்து ஒன்றும் செய்திட முடியாது: கமல்

திருச்சியில் PEFI & கமல் பண்பாட்டு மையம் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், விளையாட்டிலும், சினிமா தியேட்டரிலும் தான் சாதி ஒழிந்துள்ளது என்றார். விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் டிகிரியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கமல், அரசியல் விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டும் என கூறினார்.
News December 24, 2025
தேர்தலில் ஒதுங்கியிருக்க மாட்டேன்: சசிகலா

கடந்த காலங்களில் சிலர் செய்த தவறின் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக நாள்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிச்சயம் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.


