News April 2, 2025
பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல்: இந்தியா 3ம் இடம்

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. போர்ப்ஸின் பட்டியலில் 902 பெரும் கோடீஸ்வரர்களுடன் USA முதலிடத்தில் உள்ளது. 902 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.581 லட்சம் கோடி. இதையடுத்து, சீனா 450 பேருடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 205 பேருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. 205 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.80.41 லட்சம் கோடி ஆகும்.
Similar News
News November 7, 2025
இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?
News November 7, 2025
நடிகர் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ED சம்மன்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி ED அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும் வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ம் தேதி ED அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
News November 7, 2025
அதிமுகவிலிருந்து யாருனாலும் போகட்டும்: வைகைச்செல்வன்

அதிமுகவிலிருந்து செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டது குறித்து வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும், கவலை இல்லை என்ற அவர், எஃகு கோட்டையாக விளங்கும் அதிமுகவில் இருந்து 2 பேர் விலகினால் எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.


