News September 19, 2025
கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட்: TN-க்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.71 லட்சமாக உயர்ந்திருப்பது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ல் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, தற்போது 90% அதிகரித்துள்ளது. 1.78 லட்சம் குடும்பங்களுடன், இந்திய கோடீஸ்வரர்களின் தலைநகராக மகாராஷ்டிரா விளங்குகிறது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது.
Similar News
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.
News March 8, 2026
விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
News March 8, 2026
பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

பெண்களின் ஆலோசனையை கேட்கும் ஆண்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் என்று ஆய்வு கூறுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கேளுங்க பாஸ்!


