News June 18, 2024

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்

image

இந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை தி இந்து ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாருக் கான் ஒரு படத்திற்கு சுமார் ₹150 – ₹250 கோடி சம்பளம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ரஜினி ₹150 – ₹210 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. விஜய் ₹130 – ₹200 கோடி சம்பளத்துடன் 3ஆவது இடத்திலும், பிரபாஸ் ₹100 – ₹200 கோடி சம்பளத்துடன் 4ஆவது இடத்திலும் உள்ளார்.

Similar News

News September 14, 2025

BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்!

image

தன்னை கட்சியிலிருந்து நீக்கினால் கூட அமைதியாக இருப்பேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், TTV தினகரனை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க EPS-க்கு விடுத்த 10 நாள்கள் கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தன்னை நீக்கினாலும் அமைதியாக இருப்பேன் என கூறுவதன் மூலம் மனம் மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News September 14, 2025

மூலிகை: அரைக்கீரையும் அற்புத நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
✦அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும்.
✦அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
✦வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
✦அரைக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். SHARE IT.

News September 14, 2025

GALLERY: சிகரம் தொட்ட இசைஞானியின் விருது விழா

image

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சினிமா- அரசியல் துறை பிரபலங்களும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளையராஜா ஹார்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் அவருக்கு நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த போட்டோஸை DCM உதயநிதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றை மேலே Swipe செய்து பார்க்கவும்.

error: Content is protected !!