News September 10, 2025
சோஷியல் மீடியாக்களை தடை செய்த நாடுகள் பட்டியல்

சமூக வலைதளங்களை தடை செய்ததற்கு எதிரான போராட்டம், அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலக காரணமாக இருந்ததை நேபாளத்தில் நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில், இதுபோன்ற தடைகள் இதற்கு முன்பும் சில நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில நாடுகளில் தடை இன்னும் அமலிலே உள்ளது. அப்படிப்பட்ட நாடுகள் எவை, எதற்காக தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மேலே உள்ள படங்களில் பார்க்கலாம்.
Similar News
News September 10, 2025
பாலியல் வழக்கில் பிருத்வி ஷாக்கு ₹100 ஃபைன்!

2024-ல் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது சப்னா கில் என்ற பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், புகார் தொடர்பாக பதிலளிக்கும்படி பிருத்வி ஷாக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பலமுறை உத்தரவிட்டும் பதிலளிக்காததால், தற்போது நீதிமன்றம் அவருக்கு ₹100 அபராதம் விதித்துள்ளது. இத்துடன் வரும் டிசம்பர் 16-ம் தேதிக்குள் இந்த வழக்கில் பிருத்வி ஷா பதிலளிக்க வேண்டும் எனவும் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
News September 10, 2025
BREAKING: பெண்களுக்கு ‘ஒரு சவரன் தங்கம்’.. தமிழக அரசு

பெண்களுக்கான ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்தவுள்ளது. தற்போது தங்கத்தின் விலை கிராமுக்கு ₹10,000-ஐ தாண்டிவிட்டது. இந்நிலையில், செயல்பாட்டில் உள்ள 4 திருமண நிதியுதவி திட்டங்களில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ₹45 கோடி மதிப்பீட்டில், 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
News September 10, 2025
ஆக்ஷனில் இறங்கிய ராமதாஸ்; அன்புமணிக்கு செக்

பாமகவிலிருந்து அன்புமணியை தற்காலிகமாக நீக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோர வாய்ப்புள்ளது என்பதற்காக முன்கூட்டியே ராமதாஸ் தரப்பு சென்னை HC & உரிமையியல் கோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோரினால் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.