News July 18, 2024

‘பிக் பாஸ் 8’ பங்கேற்பாளர்களின் பட்டியல்?

image

விஜய் டிவியில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 8ஆவது சீசன் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பங்கேற்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர்கள் விஜய குமார், பப்லூ பிருத்விராஜ், ரோபோ சங்கர், நடிகைகள் பூனம் பாஜ்வா, சோனியா அகர்வால், கிரண், பாடகிகள் ஸ்வேதா மோகன், கல்பனா மற்றும் மகபா ஆனந்த, அமலா ஷாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்படுகிறது.

Similar News

News November 26, 2025

ஸ்ரீவி., சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை

image

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான முத்துப்பாண்டி (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

News November 26, 2025

விழுப்புரம்: பெண் மர்ம சாவு – திடீர் திருப்பம்!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27) தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் பார்வதி இறந்து கிடந்தார். இந்நிலையில், அவருக்கும், கணவர் மதியழகனுக்கும் ஏற்பட்ட தகராறில், மதியழகன் பார்வதியை சுவற்றில் முட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் மதியழகனை கைது செய்தனர்.

News November 26, 2025

திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!