News June 28, 2024
ஆட்சியாளர்கள் உதவியுடன் சாராயம் விற்பனை: பிரேமலதா

தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடு கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் ரவி தங்களிடம் வேதனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
Similar News
News December 2, 2025
ராசி பலன்கள் (02.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 2, 2025
கோலி இளமை துடிப்புடன் இருக்கிறார்: ஸ்டெய்ன்

விராட் கோலி மனரீதியாக இளமையாகவும், வலிமையாகவும் உள்ளதாக SA முன்னாள் வீரர் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். கோலியின் வயதுடையவர்கள் (37 முதல் 38) பொதுவாக வீட்டை விட்டு வெளியேறுவதையே வெறுப்பார்கள். பெரும்பாலும் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புவார்கள். ஆனால், கோலி இந்த வயதில், களத்தில் இளம் வீரர்களுக்கு நிகராக ஓடுகிறார், டைவ் அடிக்கிறார் என்றும் ஸ்டெய்ன் பாராட்டியுள்ளார்.
News December 1, 2025
நடிகை கனகா வீட்டில் பெரும் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

நடிகை கனகாவின் தந்தையும், ஜனாதிபதி விருது பெற்ற இயக்குநருமான தேவதாஸ் (88), உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாள்களாகவே உடல்நலம் குன்றி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திரைப்பட தயாரிப்பாளர் எஸ்எம்எஸ் சுந்தரராமனின் மகனான தேவதாஸ், நடிகை தேவிகாவை காதல் திருமணம் செய்து பிரிந்தார். இத்தம்பதியருக்கு பிறந்தவர் தான் நடிகை கனகா.


