News April 14, 2025

விண்வெளிக்கு பறக்கும் சிங்க பெண்கள்

image

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலி லாரென், பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பெண்கள் அடங்கிய குழு இன்று விண்வெளிக்கு பறக்க உள்ளது. ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் NS-31 திட்டத்தின் படி இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு, பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விண்வெளி பயணமாக இது அமைய உள்ளது. இந்த பயணம் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என அப்பெண்கள் குழு தெரிவித்துள்ளது.

Similar News

News April 15, 2025

நாட்டின் பணவீக்கம் குறைந்தது

image

நாட்டின் மொத்த விலை பணவீக்கம், மார்ச் மாதத்தில் 2.05%ஆக குறைந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது 2.38%ஆக இருந்தது. மேலும், உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.57%ஆக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 3.38%ஆக இருந்தது. பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், RBIயும் வட்டி விகிதத்தை குறைத்து, லோன் வாங்கியோருக்கு நற்செய்தி கொடுத்து வருகிறது.

News April 15, 2025

சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு

image

சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே 3-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், ஏப்ரல் 23-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்து வலுவான வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

News April 15, 2025

₹100 கோடி வசூல்..ரசிகர்களால் கொண்டாடப்படும் GBU

image

அஜித் – ஆதிக் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே நாட்களில் ₹100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

error: Content is protected !!