News August 24, 2024
Lion is always a Lion… மாஸ் காட்டும் விஜய்

‘G.O.A.T’ படத்தின் பட்டையை கிளப்பும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் மாஸான புகைப்படங்களை Zee Studios நிறுவனம் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளது. செப்.5ஆம் தேதிக்காக யாரெல்லாம் Waiting… கமெண்ட் செய்யுங்க…
Similar News
News January 1, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.1) 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,440-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹320 குறைந்து ₹99,520-க்கு விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளதால் இன்று தங்கம் வாங்க நினைத்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News January 1, 2026
ராமதாஸ், அன்புமணியை ஒன்று சேர்ப்பேன்: ஜான்பாண்டியன்

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு தான் மிகவும் மன வருத்தப்பட்டதாக ஜான்பாண்டியன் கூறியுள்ளார். ராமதாஸை வன்னியர்களுக்காக போராடிய போராளி என குறிப்பிட்ட அவர், தந்தையும் மகனும் இணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர், இருவரையும் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
இனி வீடுகளில் பணம் வைத்திருக்க கூடாதா? CLARITY

புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் படி, 2026 ஏப்ரல் முதல், வீட்டில் அதிக பணம் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உலாவரும் செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வராது எனவும், முன்பு இருந்த சட்ட நடைமுறைகளை எளிமையாக்குவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் விளக்கமளித்துள்ளது. அனைவரும் தெரிஞ்சுக்கணும் SHARE THIS.


