News March 5, 2025

EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்

image

TNல் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெற நுகர்வோர் தங்கள் ஆதாரை, EB எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டுமென TN அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ள இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயமாகும்.

Similar News

News November 30, 2025

ஆக்டிவ் இல்லாத சிம் கார்டில் யூஸ் பண்றவங்களுக்கு செக்!

image

மொபைலில் ஆக்டிவாக உள்ள சிம் கார்டு இல்லாவிட்டால், WhatsApp, Telegram, ShareChat உள்ளிட்ட SM தளங்களை பயன்படுத்த முடியாமல் இருக்குமாறு செய்ய வேண்டும் என அந்தந்த நிறுவனங்களுக்கு DoT அறிவுறுத்தியுள்ளது. 90 நாள்களுக்கு, குறிப்பிட்ட App உடன் சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியுமாம்.

News November 30, 2025

திமுக கூட்டணியில் இணைந்தது புதிய கட்சி

image

2026 தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்த DMK, ADMK, TVK தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ கட்சி இணைந்துள்ளது. இன்று மொடக்குறிச்சியில் அக்கட்சி சார்பில் நடைபெறவிருக்கும் ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநாட்டில் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டருக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு சீட் உறுதி என சொல்லப்படுகிறது.

News November 30, 2025

தமிழகத்தில் 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

image

2024 – 2025 கல்வியாண்டில் 3.51 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இவர்களில் 16,929 மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லையாம். இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவியுடன், உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து காரணங்களை அறிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

error: Content is protected !!