News May 27, 2024

நந்தினி போல ஆவினும் களம் காணுமா?

image

ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், விளையாடும் ஸ்காட்லாந்து அணி வீரர்களின் ஜெர்சியில் கே.எம்.எஃப்பின் நந்தினி பால் லோகோ இடம்பெறவுள்ளது. டெண்டர் & ஏல செயல்முறைகள் மூலம் அந்த அணிக்கு நந்தினி ஸ்பான்சர் வழங்கியுள்ளது. அமுலுக்கு போட்டியாக சர்வதேச சந்தையை இலக்கு வைத்து இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆவினை களமிறக்க தமிழக விளையாட்டுத்துறையும் முனைப்பு காட்டுமா?

Similar News

News March 4, 2026

தருமபுரி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா? MUST KNOW!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account-க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 4, 2026

சிலரின் தோல்விகளை மறைக்கவே போர்: ஸ்பெயின்

image

போர் வேண்டாம் என்ற நிலைபாட்டில் ஸ்பெயின் அரசும், மக்களும் உள்ளதாக அந்நாட்டின் PM பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். <<19293932>>ஸ்பெயின் உடனான வர்த்தக உறவை துண்டிப்பதாக டிரம்ப்<<>> அறிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய பெட்ரோ, ஈரான் மீதான போர் மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரழிவிற்கான தொடக்கம் என்றும், சில அதிபர்கள் தங்கள் தோல்விகளை மறைக்க போரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் டிரம்ப்பை விமர்சித்துள்ளார்.

News March 4, 2026

சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

image

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!