News October 7, 2025

தீபாவளி ரேஸில் இருந்து ‘LIK’ படம் விலகல்

image

பிரதீப் ரங்கநாதனின் LIK படம் டிச.18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிரதீப்பின் ‘LIK’, ‘டியூட்’ படங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வசூல் பாதிப்பை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதியை மாற்றுவதாக LIK படக்குழு தெரிவித்துள்ளது. ‘டியூட்’ ரிலீஸை ஒத்திவைக்குமாறு அப்படக்குழுவிடம் கோரிக்கை விடுத்தும், அது பலனளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ‘LIK’ படக்குழு கூறியுள்ளது.

Similar News

News October 7, 2025

OpenAI நிறுவனத்திற்கு CEO ஆகும் AI: சாம் ஆல்ட்மேன்

image

மனிதர்களின் தனித்திறன் என்பது அறிவாற்றல் அல்ல; பிறர் மீது அக்கறை கொள்ளும் திறன் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். மனிதர்களை விட AI அசாதாரண திறன் கொண்ட அதிபுத்திசாலியாக மாறும் எனவும், OpenAI நிறுவனத்திற்கு ஒரு AI, CEO-ஆக வரும் காலம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வருங்காலத்தில் மற்றவர்களுக்கு உதவுவது, கவனித்து கொள்வது சார்ந்த புதிய வேலைகள் உருவாகும் என்றும் கணித்துள்ளார்.

News October 7, 2025

அக்டோபர் 7: வரலாற்றில் இன்று

image

*1708 – குரு கோபிந்த் சிங் மறைந்த நாள். *1920 – தமிழ் கவிஞர் முடியரசன் பிறந்தநாள். *1952 – ரஷ்ய அதிபர் புடின் பிறந்தநாள். *1978 – வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பிறந்தநாள். *1979 – நடிகர் நரேன் பிறந்தநாள். *1981 – வீணை கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி பிறந்தநாள். *1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலிஸ்தான் விடுதலையை அறிவித்தனர். எந்நாடுகளும் இதை அங்கீகரிக்கவில்லை.

News October 7, 2025

வங்கியில் ₹93,960 சம்பளத்தில் வேலை.. அப்ளை பண்ணுங்க

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 56 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்த 24-39 வயதுக்குட்பட்டவர்கள் மேனேஜர், சீனியர் மேனேஜர், Forex Acquisition பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ₹93,960 முதல் ₹1,05,280 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

error: Content is protected !!