News February 16, 2025
பென்சிலை தூக்குவதே ஒரு Workout தானாம்: ஏன் தெரியுமா?

8 மாதங்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் பூமியில் நடமாட சில நாள்கள் எடுக்குமாம். புவியீர்ப்பு விசை இவர்களின் அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்துமாம். ஏனெனில் எடையை உணராது மிதந்தவர்களின் உடல், பூமியில் நிலைகொள்ள மறுவாழ்வு பயிற்சியில் தேவைப்படும். ஒரு பென்சிலை தூக்குவதே உடற்பயிற்சி போல இருக்கும் என்கின்றனர்.
Similar News
News August 13, 2025
திமுகவில் இணைந்தது ஏன்? மைத்ரேயன் விளக்கம்

அமைப்பு செயலாளராக இருந்த தன்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை என திமுகவில் இணைந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். EPS பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் அழைத்து வரப்படும் கூட்டம் மட்டுமே என்றும் அவர் மக்கள் தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News August 13, 2025
‘கூலி’ படத்துக்கு போலி டிக்கெட்கள் ! ரசிகர்கள் அதிர்ச்சி

நாளை வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான டிக்கெட்கள் மளமளவென விற்றுத்தீர்ந்துள்ளன. நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளதால் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி டிக்கெட்டை ₹500 முதல் ₹3,000 வரை விற்கின்றனர். இதுபோதாது என போலி டிக்கெட்களும் கூலி படத்துக்கு விற்பனையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. Careful மக்களே!
News August 13, 2025
அபிமன்யுவிற்கு சான்ஸ் கொடுக்க வேண்டும்: கங்குலி

அபிமன்யு ஈஸ்வரனுக்கு டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கங்குலி வலியுறுத்தியுள்ளார். அணியில் 3-வது இடத்தில் களமிறங்க அவர் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார். அபிமன்யு கடந்த 4 ஆண்டுகளாக அணியில் இடம்பெற்றாலும், பிளேயிங் 11-ல் இடம்பெறவில்லை. முன்னதாக, தனது மகனுக்கு பின்பாக அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் டெஸ்ட்டில் அறிமுகமாகிவிட்டதாக அவரது தந்தை ரங்கநாதன் வருத்தம் தெரிவித்திருந்தார்.