News March 31, 2025
வளர் பிறை போல் வாழ்க்கை ஒளிர வேண்டும்: இபிஎஸ்

இஸ்லாமியர்கள் மனமகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுவதாக இபிஎஸ் ரமலான் வாழ்த்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 3, 2025
வின் டீசல் தெரியும்; காஸ்ட்லி டீசல் தெரியுமா?

அரசியலில் மீம்ஸ் விமர்சனம் தான் லேட்டஸ்ட் டிரெண்ட். நேற்று கர்நாடகா பாஜக X-ல் பதிவிட்ட மீம்ஸ்தான் தற்போதைய வைரல். ஹாலிவுட் நடிகர் வின் டீசல் படத்துடன், அம்மாநில CM சித்தராமையா போட்டோவை இணைத்து, ‘இவர் வின் டீசல், அவர் காஸ்ட்லி டீசல்’ என்று பதிவிட்டுள்ளது. ஏற்கெனவே காங்., அரசை 60% கமிஷன் அரசு என பாஜக விமர்சிக்கும் நிலையில், நேற்று டீசல் விலையை ₹2 உயர்த்தியதால், சித்தா மீது இந்த மீம்ஸ் தாக்குதலாம்.
News April 3, 2025
இந்திய நிலங்களை மீட்க வேண்டும்: ராகுல் காந்தி

சீனாவிடம் இருந்து இந்திய நிலங்களை மீட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் பேசிய அவர், இந்திய– சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சீன அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்திய வெளியுறவுச் செயலாளர், கேக் வெட்டினார் என குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிய திமுக MP டி.ஆர்.பாலு, அதை மீட்கக் கோரி TN சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.
News April 3, 2025
ஏப்ரலில் 9 நாள்கள் விடுமுறை!

ஒவ்வொரு மாதமும் தொடங்கும்போது, எவ்வளவு நாள் லீவ் கிடைக்கும் என்றுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில், ஏப்ரல் மாதம் 9 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது. ஏப்.10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்.14 தமிழ் வருட பிறப்பு, ஏப்.18 புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 12, 26ஆம் தேதி 2வது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார விடுமுறையாகும். இதில் ஏப்.12, 13, 14 என 3 நாள் தொடர் விடுமுறை வருகிறது.