News April 6, 2025
பயிரை மேய்ந்த வேலிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.
Similar News
News November 15, 2025
SA கேப்டனை உருவ கேலி செய்த பும்ரா

IND vs SA மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. SA கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் செய்த போது, அவரது உயரத்தை கேலி செய்யும் வகையில் ‘Bauna’ (குள்ளமானவர்) என பும்ரா கூறியது, ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் பும்ராவை விமர்சித்தனர். ஆனால், SA கோச் ஆஷ்வெல் பிரின்ஸ், இந்த விவகாரத்தை பெரிதாக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.
News November 15, 2025
பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.


