News April 27, 2025
உயிர் காத்த Artificial Intelligence

ChatGPT என்ற AI (செயற்கை நுண்ணறிவு) தனது உயிரை காப்பாற்றியதாக பிரான்ஸ் நாட்டு பெண் மார்லி (27) தெரிவித்துள்ளார். அதிக வியர்வை, சரும எரிச்சல் போன்றவற்றால் அவதிப்பட்ட அவர், மருத்துவர்களிடம் சோதனை செய்தபோது ஏதும் இல்லையென்று கூறிவிட்டனராம். ஆனால், அவருக்கு அரிய வகை கேன்சர் இருக்கலாம் என்று ChatGPT சொல்ல, மீண்டும் மருத்துவரை அணுகி அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Similar News
News December 22, 2025
U 19: விழா மேடை ஏறாத இந்திய அணியினர்

ஆடவர் <<18075095>>ஆசிய கோப்பையை<<>> அடுத்து, U-19 ஆசிய கோப்பையிலும், இந்தியா – பாக்., இடையேயான மோதல் நீடித்துள்ளது. டிராஃபியை வெற்றி பெற்ற பாக்., அணிக்கு, அந்நாட்டைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்ஷின் நக்வி வழங்கியது மட்டுமல்லாமல், வீரர்களுடன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார். ஆனால், மேடை கூட ஏறாத இந்திய அணியினர், ICC இணை உறுப்பினர் முபாஷிர் உஸ்மானியிடம் இருந்தே மெடல்களை பெற்றனர்.
News December 22, 2025
வளர்ச்சி உடன் MH உறுதியாக உள்ளது: PM மோடி

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் BJP தலைமையிலான மஹாயுதி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த வெற்றிக்கு அம்மாநில மக்களுக்கு PM மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தங்களது (BJP) தொலைநோக்கு பார்வையில் உள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, வளர்ச்சி உடன் மஹாராஷ்டிரா (MH) உறுதியாக நிற்கிறது என்றும் கூறியுள்ளார்.
News December 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 557 ▶குறள்: துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. ▶பொருள்: மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.


