News April 20, 2025
‘உயிர் உங்களுடையது தேவி’.. த்ரிஷா க்யூட் போட்டோஷூட்

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போதும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். இளசுகளை கவரும் வகையில் இன்ஸ்டகிராமில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சேலை அணிந்து த்ரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ‘Cuteness overload’, ‘Gorgeous’ என ரசிகர்கள் கமெண்ட்டில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
பொங்கலுக்கு பிறகும் ₹3000? வெளியான புதிய தகவல்

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ₹3000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளியூரில் இருப்பவர்கள் பொங்கல் அன்றுதான் சொந்த ஊர் திரும்புவார்கள் என்பதால், பொங்கல் பரிசை வாங்க ஏதுவாக கடைசி தேதியை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் (ஜன.18-ம் தேதி) பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News January 11, 2026
‘வா வாத்தியார்’ ரிலீசில் சிக்கலா?

₹21 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் ‘வா வாத்தியார்’ படத்தை ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்யமுடியாது என மெட்ராஸ் HC உத்தரவிட்டது. இதனிடையே, ஜன.14-ல் ‘வா வாத்தியார்’ ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதால், அவர் அப்பணத்தை தயார் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கரூரை சேர்ந்த நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடைகோரி HC-யில் மனு தாக்கல் செய்துள்ளது. நாளை நீதிபதி செந்தில்குமார் இந்த மனுவை விசாரிக்கவுள்ளார்.
News January 11, 2026
முடி வேகமாக வளர மூலிகை எண்ணெய்!

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, பிரிங்கராஜ் தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் வறுத்து, எண்ணெய்யை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE THIS.


