News October 14, 2025

உயிருக்கு ஆபத்து.. விஜய்யிடம் உதவி கேட்கும் பிரபாகரன்

image

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் CBI விசாரணை கோரிய பிரபாகரன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் விஜய் தனக்கும், தனது தாய்க்கும் பாதுகாப்பு பெற்று தர வேண்டும் என்றும், தனது தங்கையின் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான பிரபாகரன் உயிருக்கு அச்சுறுத்தல் என கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 14, 2025

கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

image

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

News October 14, 2025

BREAKING: TET தேர்வு தேதி அறிவிப்பு

image

2026-ல் <<17996230>>3 சிறப்பு TET<<>> தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்தது. இந்நிலையில், உத்தேச தேர்வு தேதியை TRB அறிவித்துள்ளது. ஜனவரி 24 (அ) 25-ம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்றும், ஜூலை, டிசம்பரில் நடைபெறும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்காக சிறப்பு TET தேர்வு நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 14, 2025

BREAKING: விஜய் புதிய முடிவு.. விரைவில் தேதி அறிவிப்பு

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அக்.17-ம் தேதி விஜய் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், N.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், விஜய் கரூர் செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சந்திக்கும் புதிய தேதியை ஓரிரு நாள்களில் N.ஆனந்த் தெரிவிப்பார் என நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!