News December 14, 2024

அல்லு அர்ஜுனுக்கு ஆயுள் தண்டனையா?

image

அல்லு அர்ஜுனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 105,118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

Similar News

News March 7, 2026

கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, கருவறையின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை வணங்கிவிட்டு பின்னர், தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது முன்னோர்கள் கடைபிடித்த விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.

News March 7, 2026

தவெக தான் எதிர்க்கட்சி: ஜோதிமணி

image

2026 தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என ஜோதிமணி கூறியுள்ளார். விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் எதிர்க்கட்சியாக தவெக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், TN-ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும், அதிமுக சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுதான் எனவும் பேசியுள்ளார்.

News March 7, 2026

தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

image

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!