News October 5, 2024

ஆயுள் வளர்க்கும் நட்ஸ்

image

பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களை சாப்பிடுவதால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து கணிசமான அளவு குறைவதாக New England Medical இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது. USAஇல் கடந்த 30 ஆண்டு காலத்தில் 1.2 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், ஒருவர் தினமும் எவ்வளவு நட்ஸ்களை உட்கொள்கிறார்களோ அந்தளவு நன்மை ஏற்படுகிறது. அவர்கள் புகைப்பழக்கம் இல்லாமலும், உடற்பயிற்சி செய்பவர்களாகவும் இருப்பதால் ஆயுள் கூடுகிறதென்றும் தெரியவந்துள்ளது.

Similar News

News August 13, 2025

AI-யால் செய்யவே முடியாத வேலைகள்..பட்டியல் இதோ!

image

AI-யால் வேலை பறிபோகும் அச்சம் மக்களிடையே இருக்கிறது. அந்த வகையில் AI-யால் செய்யவே முடியாத வேலைகளின் பட்டியலை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. செவிலியர், ரத்த மாதிரிகளை எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர் போன்ற வேலைகளை AIயால் செய்யமுடியாதாம். சில வேலைகளில் மனிதர்களின் பங்கும் வேண்டும் என்பதால் AI-யால் முற்றிலுமாக அதனை செய்யமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

உருவானது காற்றழுத்தம்.. கனமழை வெளுக்கும்!

image

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. அது நாளை மேலும் வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!

News August 13, 2025

பிக் பாஸில் பஹல்காமில் கணவரை இழந்த பெண்!

image

இந்தியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி நர்வால் பங்கேற்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது நெட்டிசன்களிடையே கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் கேரக்டர் விமர்சிக்கப்படுவதால், இவர் கலந்து கொள்ள வேண்டுமா என வினவுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!