News September 13, 2024
பொய்… பொய்… நம்பாதீங்க: அதானி குழுமம்

சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென அதானி குழுமம் மறுத்துள்ளது. பணமோசடி வழக்கில் அதானி குழுமத்தின் $310 மில்லியன் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி மறுப்பதாக தெரிவித்துள்ள அக்குழுமம், தங்கள் நிறுவன கணக்குகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விளக்கியுள்ளது.
Similar News
News November 6, 2025
விமானப்படையில் சாதனை பெண்கள் PHOTOS

தடைகள் ஆயிரம் இருந்தாலும், தைரியம் தான் பறக்க கற்றுத் தருகிறது. பெண்கள், இந்திய விமானப்படையில் சேர்ந்ததோடு, உயர பறக்கவும் செய்துள்ளனர். விமானியாக, அதிகாரியாக, விஞ்ஞானியாக அவர்கள் சாதித்தது, தங்களுக்காக மட்டுமல்ல, கனவுகளோடு காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் தான். தைரியத்திற்கு பாலினம் கிடையாது என்பதை நிரூபித்த பெண்களின் போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 6, 2025
IND vs AUS: அரை சதத்தை தவறவிட்டார் கில்

ஆஸி.,க்கு எதிரான 4-வது டி20-ல், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அரை சதத்தை தவறவிட்டுள்ளார். 39 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 46 ரன்கள் எடுத்த நிலையில், நேதன் எல்லிஸ் வீசிய ஸ்விங்கரில் போல்ட் ஆனார். 14.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா களத்தில் உள்ளனர்.
News November 6, 2025
இந்த நாடுகளுக்கு விசா தேவையில்லை.. பறப்போமா?

நினைத்த நேரத்தில் பையை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டுமா? பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா தேவையில்லை. இது உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளுக்கு, இந்தியர்கள் விசா இல்லாமல் எளிதாக பயணிக்கலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த நாட்டுக்கு பறக்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க.


