News May 4, 2024

முதல்முறையாக 2 கைகளை இழந்தவருக்கு லைசென்ஸ்

image

இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அவரது கார் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து, கால்கள் மூலம் கார் ஓட்டி காட்டியதால் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

நாளை முதல் அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா!

image

தமிழகத்தில் நாளை(டிச.10) முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நாளை தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST

News December 9, 2025

நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

image

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.

News December 9, 2025

நார்த்தங்காயின் நன்மைகள்

image

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!