News April 14, 2024
எல்.ஐ.சி. வசம் அதானி குழுமத்தின் ₹61,210 கோடி பங்கு

அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி.யின் முதலீடு ஒரே ஆண்டில் 59% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத கணக்கீட்டின்படி ₹38,471 கோடியாக இருந்த முதலீடு, தற்போது ₹61,210 கோடியாக உயர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொருத்தமட்டில் ₹12,450.09 கோடியிலிருந்து ₹22,776.89 கோடியாகவும், அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தில் ₹8,495 கோடியில் இருந்து ₹14,305 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News December 7, 2025
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் Ex அமைச்சர் செல்லையா ராஜதுரை(98) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் MP-யாக இருந்துள்ளார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய இவர் MGR, சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். #RIP
News December 7, 2025
SIR படிவம் கொடுத்தவர்களின் கவனத்திற்கு..

SIR படிவம் கொடுத்தாச்சு, நம்ம வேலை முடிஞ்சுது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். உங்க படிவத்தை SIR அலுவலர், ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறாரா என்பதை செக் பண்ணுங்க. அதற்கு, <
News December 7, 2025
₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: CM

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை உருவாக்கியிருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய அவர், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ₹11.83 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை என்று தெரிவித்த CM, நாட்டிலேயே பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறினார்.


