News November 19, 2024
ஹிந்தி, ஆங்கிலத்தில் LIC இணையதளம் மாற்றம்

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, LIC இணையதளம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி மொழி மட்டுமே இருந்ததாகவும் LIC விளக்கமளித்துள்ளது. முதலில் மொழித்தேர்வில், ஆங்கிலமும் ஹிந்தியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மொழித்தேர்வில் English என மாற்றப்பட்டுள்ளது. எனினும், முகப்பு பக்கம் ஹிந்தியிலேயே இருக்கிறது.
Similar News
News March 30, 2026
EXCLUSIVE: திலகபாமாவுக்கு தோல்வியடையும் தொகுதியா?

பெரம்பூரில் மற்றவர்களை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என Way2News-க்கு திலகபாமா பேட்டியளித்துள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதி என்பதால் வேண்டுமென்ற பாமக அவரை அங்கு நிற்கவைத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து தொகுதிகளிலும் வெற்றியடையும் ஆள்களையே பாமக தேர்வு செய்யும் எனவும், தன்னை நம்பியே இத்தொகுதியை கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஏப்.2-ல் இவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
News March 30, 2026
விரலில் அடிபட்டா கைரேகை மாறுமா?

போன் Lock முதல் பயோமெட்ரிக் வரை இன்றியமையாததாக இருக்கும் கைரேகை கையில் அடிப்பட்டாலோ, தீக்காயம் ஏற்பட்டாலோ கைரேகை மாறுமா என்ற கேள்வி எழலாம். அறிவியலின் படி, ஆசிட் பட்டாலும் கைரேகை மாறாதாம். கருவில் உருவாகும் கைரேகை வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்குமாம். உடல்எடை கூடியோ, குறைந்தாலோ ரேகையின் அளவு மாறுமே தவிர டிசைன் மாறாதாம். காயம் ஏற்பட்டு அழிந்தாலும் கூட, சில மாதங்களில் அதே டிசைனுடன் வளருமாம்.
News March 30, 2026
ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின், விஜய்

கொளத்தூரில் ஸ்டாலினும், பெரம்பூரில் விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, ஒரே நேரத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர். பரப்புரை வாகனத்தில் பயணிக்கும் இருவரையும் மக்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2026 தேர்தலில் ஸ்டாலினுக்கும் தனக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்த நிலையில், 2 CM வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் களமிறங்கியுள்ளது TN அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>


