News October 25, 2025
அதானியை காப்பாற்ற LIC ₹33,000 கோடி முதலீடா?

கடன் மற்றும் அமெரிக்க வழக்கால் தத்தளித்த அதானி குழுமத்தை மீட்க, LIC மூலம் மத்திய அரசு ₹33,000 கோடி வழங்க திட்டமிட்டதாக The Washington Post செய்தி வெளியிட்டது. இதை மறுத்துள்ள LIC, தங்களது முதலீட்டு முடிவுகள் அனைத்தும் வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு சுதந்திரமாக எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், இதில் நிதி அமைச்சகம் உள்ளிட்ட எந்த அரசு துறைகளின் தலையீடும் இல்லை என்றும் மறுத்துள்ளது.
Similar News
News October 25, 2025
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்ஸ்டா பிரபலம் ஆதிரை நடையை கட்டியுள்ளார். இந்த வார எவிக்ஷனில் ஆதிரை, அரோரா, துஷார், ரம்யா, கலையரசன், பிரவீன் ராஜ், வியானா நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் ஆதிரை எலிமினேட் செய்யப்படுவதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். முன்னதாக சுபிக்ஷா நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்று, எவிக்ஷனில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 25, 2025
ஐஸ்லாந்தில் முதல்முறையாக கொசுக்கள்

குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில், முதல் முறையாக சொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 கொசுக்கள் பிடிக்கப்பட்டன. இந்த கொசுக்கள், நோய்களை பரப்பாத வகை என்றாலும், இது காலநிலை மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஐஸ்லாந்தின் பனியுலகில் இது ஒரு புதிய அத்தியாயமாகும். கொசுக்களுக்கு வெப்பநிலை பொதுவாக ~10°C க்கு மேல் தேவை என்பதால், அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்து வந்தது.
News October 25, 2025
டார்ச் இருக்கும்போது Lantern எதற்கு? மோடி

பிஹாரில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட PM மோடி, பொதுமக்களை மொபைலில் டார்ச்சை எரியச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் டார்ச்சை ஆன் செய்ய, ‘இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது எதற்கு Lantern விளக்குகள்?’ என்று கேட்டார். RJD-யின் சின்னம் Lantern விளக்குகள் என்பதையே மோடி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சி சின்னங்களுக்கு ஒரு பன்ச் சொல்லுங்களேன்.


