News March 11, 2025
கடுமையாக பாதிக்கப்பட்ட LIC முதலீடு

நாம் செலுத்தும் ப்ரீமியம் தொகையினை LIC வேறு நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. அதில் கிடைக்கும் லாபத்தை வைத்துதான் நம்முடைய மெச்சூரிட்டி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், LICயின் முதலீடு இன்று கடும் சரிவினை சந்தித்திருக்கிறது. IndusInd வங்கியின் பங்கு மதிப்பு இன்று 27% சரிந்த நிலையில், அதில் அதிக முதலீடு செய்திருப்பது LICதான். அவ்வங்கியின் மொத்த மதிப்பில் 5.2 சதவீதத்தை LIC வைத்திருக்கிறது.
Similar News
News March 12, 2025
ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் கோரிய மின்சார வாரியம்!

மின் மீட்டர் அமைப்பதற்கான 2ஆவது டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இம்முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.
News March 12, 2025
டெல்லியில் புதிய சேவை அறிமுகம்

டெல்லியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், படகு சவாரி அறிமுகம் செய்யும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்டமாக சோனியா விகார் – ஜகத்பூர் இடையே 4 கி.மீ. தூரத்துக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இது கொடுக்கும் என டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லிக்கு படகு சவாரி புதிய அடையாளத்தை கொடுக்கும் என முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
News March 12, 2025
ரூ.5 கோடி எம்மாத்திரம்…ரூ.18 கோடி கொடுங்கள்: சுப்பராயன்

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த வேண்டும் என சிபிஐ MP சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவதாகவும், ஆனால் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிக்கு வெறும் ரூ.5 கோடி நிதி வழங்குவது போதாது எனவும் கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.