News February 23, 2025
LIC வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!

ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக தங்களின் சொந்த விபரங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு LIC அறிவுறுத்தியுள்ளது. அதிக லாபம் கிடைக்கும் என ஆசையை தூண்டும் வாக்குறுதிகளை நம்பி உங்கள் பாலிசி மற்றும் KYC விபரங்களை தெரியப்படுத்தக் கூடாது எனவும் தனி நபரின் பெயரில் (அ) கணக்கில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. KYC சரிபார்க்க LIC அழைப்பதில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
Similar News
News February 23, 2025
கூகுள் மேப் மூலம் கொள்ளை: ஞானசேகரன் வாக்குமூலம்

கூகுள் மேப் மூலமாக, பள்ளிக்கரணையில் சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 150 சவரன் நகைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீதான திருட்டு வழக்குகள் குறித்த விசாரணையில், இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
News February 23, 2025
மார்ச் 24, 25ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், மார்ச் 3ல் நாடாளுமன்றம் முன் தர்ணா நடத்தவும், மார்ச் 24, 25ல் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
News February 23, 2025
3 மாவட்டங்களில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவாரத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். இந்த 3 நாட்களுக்கு பதிலாக முறையே மார்ச் 8, மார்ச் 22, ஏப்ரல் 12 ஆகிய தினங்கள் வேலைநாட்களாக இருக்கும்.