News April 16, 2024
லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோம்

லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோமென மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 2 தினங்களுக்கு முன் மும்பையில் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சல்மான் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின்னர் பேசிய ஷிண்டே “அதுபோன்று மீண்டும் நடைபெறாது. ரவுடிக் கும்பல்களின் மோதலை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
Similar News
News November 15, 2025
நவம்பர் 15: வரலாற்றில் இன்று

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.
News November 15, 2025
SA கேப்டனை உருவ கேலி செய்த பும்ரா

IND vs SA மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. SA கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் செய்த போது, அவரது உயரத்தை கேலி செய்யும் வகையில் ‘Bauna’ (குள்ளமானவர்) என பும்ரா கூறியது, ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் பும்ராவை விமர்சித்தனர். ஆனால், SA கோச் ஆஷ்வெல் பிரின்ஸ், இந்த விவகாரத்தை பெரிதாக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.


