News June 26, 2024
கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: ராகுல்

தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குரலும், நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
Similar News
News December 5, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும் *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது * எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்
News December 5, 2025
இந்தியா-ரஷ்யா உறவு.. புடின் திட்டவட்டம்

இந்தியா, ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பானது அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டையும் இலக்காக கொண்டதல்ல என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை IND வாங்குவது போருக்கு நிதி அளிக்கும் செயல் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், US தங்களிடம் தான் அணுசக்தி எரிபொருள் வாங்குவதாக புடின் குறிப்பிட்டார். தானும் PM மோடியும் ரஷ்யா, இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
News December 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 540
▶குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
▶பொருள்: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.


