News November 24, 2024
கம்மி பட்ஜெட்டில் ஐரோப்பாவை சுற்றி பார்க்கலாம்..!

செக் குடியிருப்பில் உள்ள பராகுவேயில் தங்கும் விடுதிகள், உணவு, போக்குவரத்து அனைத்தும் குறைவு. ஒரு நாளைக்கு ₹3,500 – ₹4,500 இருந்தால் போதும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் நிரம்பிய போர்ச்சுகல் நாட்டில் ஒரு நாள் செலவுக்கு ₹4,000 – ₹5,000 போதும். கலாச்சாரத்திற்கு பெயர் போன ருமேனியாவில் ஒரு நாள் செலவு ₹2,500 – ₹3,500 ஆகும். ஹங்கேரி, போலந்தில் ஒரு நாளைக்கு ₹3,000 – ₹4,000 செலவாகும்.
Similar News
News November 6, 2025
‘மனித நேயர்’ மரணமடைந்தார்

மனிதாபிமானம் படைத்தவர்களை மரணம் அதிக நாள்கள் வாழ விடுவதில்லை. ஆம்! குஜராத்தை சேர்ந்த காவலர் அரவிந்த அவ்ஹர், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உதவி செய்யக்கூடிய மனிதநேயமிக்கவர். அப்படி, சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்க்கு உதவி செய்துவிட்டு திரும்பியபோது, வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
News November 6, 2025
ED-யின் ஹிட் லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள்?

அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் ED நடத்திய ரெய்டில் அரசு துறையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அரசியல் தலைவர்கள் அட்டாக் மோடில் இறங்க அறிவாலயம் அதிர்ந்துபோனது. இந்நிலையில், ED-யின் ஹிட் லிஸ்டில் மேலும் பல அமைச்சர்கள் இருக்கின்றனராம். அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் ED-யின் ரேடாரில் இருப்பதாக கூறப்படுகிறது.
News November 6, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 2 நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹90,000-க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நம்மூரிலும் உயர்ந்துள்ளது.


