News January 1, 2025

பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்போம்: இபிஎஸ்

image

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறியுள்ளார். மேலும், பொற்கால ஆட்சியை மாநிலத்தில் மீண்டும் அமைப்போம் என இந்நாளில் சபதமேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 21, 2025

இனி ₹13,000 மட்டுமே அனுப்ப முடியும்: மாலத்தீவு

image

மாலத்தீவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், இனி 150 டாலர்கள் (₹13,184) வரை மட்டுமே ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அந்நாட்டின் நாணய ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, 500 டாலர்கள் வரை (₹43,947) அனுப்ப முடியும். இந்த அறிவிப்பால், அங்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பெரும்பாலான கேரள மாநிலத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News October 21, 2025

கேதார கௌரி விரதம் இருப்பது எப்படி?

image

நல்ல கணவன் கிடைக்கவும், கணவரின் நலம் வேண்டியும் பெண்கள் கேதார கெளரி விரதம் மேற்கொள்வார்கள். 21 நாள்கள் மேற்கொள்ளப்படும் விரதம் தற்போது, ஒருநாள் விரதமாகிவிட்டது. காலையில் குளித்து, கலசத்தில் நூலால் 21 முடிச்சுகளை அமைத்து, சிவன் பார்வதியை வழிபடணும். 21 எண்ணிக்கையில் பாக்கு, வெற்றிலை, பூஜை பொருள்கள் படைத்து வழிபடலாம். விரதம் முடிந்து கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டலாம்.

News October 21, 2025

கரூர் துயரம்.. விஜய் எடுத்த புதிய முடிவு

image

கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை அஜய் ரஸ்தோகியை நேரில் சந்தித்து வழங்க விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. ஐகோர்ட் நியமித்திருந்த SIT-யிடம் இருந்து ஆவணங்களை பெற்றுள்ள CBI அதிகாரிகள் இந்த வாரத்தில் முழு வீச்சில் விசாரணையில் இறங்க உள்ளனர். அதேபோல், SC நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு அடுத்த வாரம் கரூர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!