News August 15, 2024
புதிய இந்தியாவை நோக்கி பயணிப்போம்: PM

சுதந்திர தினத்தையொட்டி, நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறுமாறு PM மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர், உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு கடன்பட்டுள்ளதாக கூறினார். 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்ததாகவும், தற்போது நமது மக்கள் தொகை 140 கோடி உள்ள நிலையில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News October 14, 2025
இணையத்தில் கசிந்த யாஷ் படக்காட்சிகள்

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஷிக்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ல் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையத்தில் கசிந்த இந்த வீடியோவை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
News October 14, 2025
ரோஹித் சர்மா அடித்து நொறுக்க உள்ள சாதனைகள்

கேப்டனாக டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபிகளை தட்டித் தூக்கிய ரோஹித் சர்மா, அடுத்ததாக 2027 உலகக்கோப்பையை முத்தமிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் இப்போது கேப்டானாக கோப்பையை தூக்கும் கனவு தகர்ந்துவிட்டது. ஆனால் ஒரு வீரராக அதை சாத்தியப்படுத்த முடியும். அதே சமயம் இன்னும் பல சாதனைகளை அவர் நெருங்கி வருகிறார். அதை மேலே SWIPE செய்து பாருங்கள்
News October 14, 2025
சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

தீபாவளிக்கு ஆம்னி பஸ்களின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை – நெல்லை செல்ல முன்பு ₹5,000 வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ₹3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களுக்கான டிக்கெட் விலையும் குறைந்துள்ளது. SHARE IT.