News August 4, 2024
புதிய நட்பை உருவாக்குவோம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உறவுகள் பலவற்றிலும் மாசில்லாதது, எதையும் எதிர்பார்க்காதது, அளவின்றி அன்பு செய்யக்கூடியது, நம்பிக்கை கொடுப்பது, இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது எது? அது தான் சாதி, மத, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான நட்பு எனும் உறவு. அந்த நட்பை கொண்டாடும் இந்த நாளில் நண்பர்களுடான நட்பை பலப்படுத்துவோம்.
Similar News
News January 30, 2026
10-வது போதும், தேர்வு கிடையாது: ₹29,000 சம்பளம்!

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்படவுள்ளன *TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன. *வயது: 18-40 *தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் *தேர்வு கிடையாது *சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை *விண்ணப்பிக்க <
News January 30, 2026
தைரியம் இருந்தால் புடின் உக்ரைன் வரலாம்: ஜெலன்ஸ்கி

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது. இதனை மறுத்துள்ள ஜெலன்ஸ்கி, துணிச்சல் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த புடின் உக்ரைனுக்கு வரலாம் என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, நாங்களும் நிறுத்துவோம் எனவும் போரை முடிவுக்கு கொண்டு வரவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
News January 30, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்துள்ளது. இன்று மதிய நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹350 குறைந்து ₹15,850-க்கும், சவரனுக்கு ₹2,800 குறைந்து ₹1,26,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


