News March 17, 2024
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் தொடங்கிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில் , ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் மக்களவைத் தேர்தலில் பங்கேற்க உள்ளது. மக்களுக்கு பணியாற்றவும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக வலுப்படுத்தக் கிடைத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.
Similar News
News January 25, 2026
இரவில் சமைத்த உணவை காலையில் சுட வைக்குறீங்களா?

இரவில் சமைத்த உணவு மீந்துவிட்டால், அதை காலையில் சுட வைத்து சாப்பிடும் வழக்கம் பல வீடுகளிலும் உண்டு. ஆனால், இப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு போன்றவற்றை கண்டிப்பாக சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என அறிவுறுத்துகிறார்கள். அடுத்த முறை கவனமா இருங்க!
News January 25, 2026
தேர்தலில் தவெக தனித்து போட்டியா? KAS சூசகம்

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 25, 2026
தமிழகத்தில் ஹிந்திக்கு இடமில்லை: CM ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ஹிந்தியை திணித்த ஒவ்வொரு முறையும் வீரியத்துடன் போராடி தமிழுக்காக உயிரைவிட்ட தியாகிகளை நன்றியோடு வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது என்றும் தெரிவித்துள்ளார்.


