News August 27, 2025

சட்டம் அறிவோம்: பஸ்ஸில் இந்த பிரச்னை வந்தால்..

image

பஸ்ஸில் AC டிக்கெட் புக் செய்துவிட்டு, AC வேலை செய்யவில்லை, சீட் சரியாக இல்லை, சுத்தமாக இல்லை என எந்த புகாராக இருந்தாலும் சட்டப்படி நிவாரணம் கிடைக்கும். முதலில் பிரச்னையை பஸ் டிரைவரிடம் கூறுங்கள். அவர் முரணாக பதிலளித்தால், பஸ் நிறுவனத்திடம் புகாரளியுங்கள். அவர்களும் முரண்டு பிடித்தால், வீடியோ ஆதாரத்துடன் வழக்கு தொடுக்கலாம். வழக்கின் செலவுடன் சேர்த்து நிவாரணம் அளிக்கப்படும். SHARE IT.

Similar News

News August 27, 2025

Beauty Tip: முடி உதிர்வை உடனடியாக நிறுத்த சிம்பிள் டிப்

image

டென்ஷனால முடி கொட்டுதா? முடி கொட்டுறதுனாலயே இன்னும் அதிகமா டென்ஷன் ஆகுறீங்களா? முடி உதிர்வ உடனடியா குறைக்க இந்த ஹேர்பேக்கை Try பண்ணுங்க. ▶ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துக்கொள்ளுங்கள் ▶ அத்துடன் அரைத்த வெங்காய ஜூஸை மிக்ஸ் செய்ய வேண்டும் ▶தலைமுடியின் வேர் முதல் நுனி வரை இதனை அப்ளை செய்து 1 மணி நேரம் ஊறவிடுங்கள். ▶வாரத்திற்கு 2 முறை இதை செய்யுங்க. SHARE.

News August 27, 2025

ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் தமிழகம்!

image

ட்ரம்பின் வரிவிதிப்பை கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. வரி விதிப்பால் பல உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தக போரைக் கண்டித்தும், ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

News August 27, 2025

அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

image

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!