News May 4, 2024

தீ அணைப்பு &மீட்புப் பணி வீரர்களை போற்றுவோம்!

image

தீ விபத்து & மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எண்ணன்ற உயிர்களைப் பாதுகாக்க ராணுவம் போல 24*7 களத்தில் நின்று பணியாற்றும் மீட்புப் பணி வீரர்களை சமூகம் குறைத்து மதிப்பிடுகிறது என்பது கசப்பான உண்மை. காடு, மலை, வெயில், மழை என பார்க்காமல் மக்களுக்காக கடமையாற்றும் இந்த வீரர்களை போற்றுவோம்.

Similar News

News December 8, 2025

WC வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதிகாவுக்கு ₹2 கோடி பரிசு

image

ODI உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவல், காயம் காரணமாக அரையிறுதி & ஃபைனலில் விளையாடவில்லை. இந்நிலையில், WC-ல் அவர் அளித்த பங்கை கெளரவிக்கும் விதமாக, டெல்லி CM ரேகா குப்தா, பிரதிகாவுக்கு ₹1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அத்துடன், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பும் (DDCA), பிரதிகாவுக்கு ₹50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

News December 8, 2025

தெலுங்கு நடிகருடன் மீனாட்சி சௌத்ரி காதலா?

image

GOAT-ல் விஜய்யுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என மீனாட்சி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தெலுங்கில் நடிக்க தொடங்கியதில் இருந்து இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வருவதாகவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

INTERNET வேண்டாம்.. மொபைல் மூலம் பணம் அனுப்பலாம்

image

இனி இண்டெர்நெட் இல்லாமலும் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம் என NPCI தெரிவித்துள்ளது. உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து, ‘*99#’ என்பதற்கு டயல் செய்யவும். கேட்கும் விவரங்களை அடுத்தடுத்து உள்ளீடு செய்து, அக்கவுண்ட்டை ஆஃப்லைனில் பதிவுசெய்ய வேண்டும். பின், மீண்டும் ‘*99#’ என்பதற்கு டயல் செய்து, தேவைப்படும் நபருக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ₹5,000 வரை அனுப்பலாம்.

error: Content is protected !!