News July 20, 2024
ஊழல் அரசை அகற்றுவோம்: கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஊழல் அரசை அகற்றுவதே தங்களின் முதல் நோக்கம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை போல் சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற அவர், மகா விகாஷ் அகாதி (I.N.D.I.A) நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றார். இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளது.
Similar News
News November 26, 2025
சரிவில் இருந்து மீண்டு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்று(நவ.26) உயர்வுடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 85,609 புள்ளிகளிலும், நிஃப்டி 320 புள்ளிகள் உயர்ந்து 26,205 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Reliance, HDFC Bank, JSW Steel, SBI, Bajaj Finserv உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. உங்கள் பங்குகளின் லாபம் எப்படி உள்ளது?
News November 26, 2025
BREAKING: 2 கோடி ஆதார் நீக்கம்

நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக UIDAI அறிவித்துள்ளது. பொது விநியோக திட்டம், இந்திய பதிவாளர் ஜெனரல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் தரவுகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட ஆதார் எண்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாது, அதேசமயம் மோசடிகளை தடுக்க இந்த நீக்கம் உதவிகரமாக இருக்கும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.
News November 26, 2025
மரத்திற்காக உயிரைவிட்ட 363 பேர்!

1730-ல் ஜோத்பூர் மன்னர் அபய் சிங் கட்டுமானத்திற்கு கெஜ்ரி மரங்களை சேகரிக்க உத்தரவிடுகிறார். ஆனால், கெஜ்ரி மரங்கள் பிஷ்னோய் சமூகத்தினருக்கு புனிதமானது என்பதால், மரங்களை கட்டிப்பிடித்து கொண்டு, வெட்ட வேண்டாம் என அவர்கள் கெஞ்சினர். விடாப்பிடியாக இருந்த ராணுவ வீரர்கள், 363 பேரை வெட்டி கொன்று விட்டு மரங்களை சேகரித்தனர். தகவல் அறிந்து குற்றவுணர்ச்சி கொண்ட மன்னர், மரங்கள் வெட்டுவதை கைவிட உத்தரவிட்டார்.


