News March 24, 2025
அலப்பற கிளப்புறோம்!! தோனிக்காக எழுதிய பாடல்

ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற அலப்பற கிளப்புறோம் பாடல் ரஜினிக்கு அப்படியே பொருந்திப்போகும். ஆனால் அது ரஜினிக்கு மட்டும் எழுதிய பாடல் இல்லையாம், தல தோனிக்கும் சேர்த்துதான் எழுதப்பட்டதாம். அனிருத் அளித்த பேட்டியில் அலப்பற கிளப்புறோம் பாடல் ரஜினிக்கு மட்டுமல்லாமல், தோனி ஸ்டேடியத்தில் நுழையும் போது போடக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என எழுதப்பட்டதாகவும் கூறினார்.
Similar News
News October 20, 2025
தேவதைகளின் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி திரையுலக நட்சத்திரங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர். கிளாஸியாகவும், மாடர்னாகவும் ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்த்து யாருடைய தீபாவளி லுக் நல்லா இருக்குனு கமெண்ட் பண்ணுங்க..
News October 20, 2025
₹66 கோடி வசூலித்த ‘டியூட்’

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ உலகளவில் மூன்றே நாள்களில் ₹66 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், தீபாவளி விடுமுறை காரணமாக வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதே நிலை நீடித்தால் ‘டியூட்’ ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ‘டியூட்’ பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
News October 20, 2025
BREAKING: மிக கனமழை வெளுக்கும்

ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளிக்கு வெளியே சுற்றுபவர்கள் கவனமா இருங்க!