News February 2, 2025

யானைகள் பலத்தோடு வாகைப் பூ மாலை சூடுவோம்: விஜய்

image

தமிழக அரசியலின் கிழக்கு திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் தவெக மாறும் என விஜய் கூறியுள்ளார். அக்கட்சியின் 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஏற்பட்ட மாற்றம் போல், 2026 தேர்தலிலும் மாபெரும் மாற்றம் நிகழும் எனவும், இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு வாகைப்பூ மாலை சூடுவது நிச்சயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 2, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹920 குறைந்தது

image

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 2, 2026

திமுகவின் நிபந்தனையால் அதிருப்தியில் வைகோ?

image

வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறாராம் வைகோ. ஆனால் 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

News March 2, 2026

ஈரோடு கிழக்கில் விஜய் போட்டியா?

image

2026 தேர்தலுக்கு ஈரோடு கிழக்கில் விஜய் களமிறங்க வேண்டும் என கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தவெகவில் கொள்கை தலைவராக உள்ள பெரியார் பிறந்த மண் என்பதாலும், விஜய்க்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் உருவானது இந்த இடத்தில்தான் என்பதாலும் விஜய்க்கு இத்தொகுதி மீது ஒரு சென்டிமென்ட் இருக்கிறதாம். எனவே, இதுகுறித்து அவர் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!